Advertisement
வருங்காலம் நம் கையில் இல்லை!
ஜூன் 05,2009,
11:26  IST

* ஆடம்பரம் என்பது அரக்க குணம். பொருள் உள்ளவன் செய்யும் ஆடம்பரத்தைக் கண்டு, இல்லாதவன் ஏக்கம் கொள்கிறான். இதனால் விருப்பு வெறுப்பு உண்டாகிறது.
* பிறருக்கு நம்மால் முடிந்த சேவைகளைச் செய்வதால் மன அமைதி உண்டாகிறது. தன்னலத்தை மட்டும் கருத்தில் கொண்டு பொருள் சேர்ப்பவர்களுக்கு வாழ்வில் சுகம் உண்டாகலாம். ஆனால், ஆத்மசுகம் என்னும் தெய்வீக நிலை சேவையால் மட்டுமே கிடைக்கிறது.
* சென்றதைப் பற்றிக் கவலைப்படாமல் இருக்க வேண்டும். கடந்ததை மீண்டும் பெற இயலாது. வருங் காலம் என்பது நம் கையில் இல்லாதது. நிகழ்காலம் ஒன்று தான் நம்கையில் இருப்பது. அதை பயனுள்ள வகையில் கழிப்பதே அறிவுடைய செயலாகும்.
* வேறொன்றையும் நீங்கள் செய்ய வேண்டாம். அன்பை மட்டும் வளர்த்துக் கொள்ளுங்கள். மனிதன் ஒவ்வொருவனும் கடவுளின் குழந்தை என்ற உண்மையை உணர்ந்து யாருக்கும் சிறுதீங்கு கூட எண்ணாதீர்கள். பிறருடைய கருத்துக்களுக்கு மதிப்பு கொடுங்கள். அவர்களுடைய சுதந்திரத்தில் தலையிடாமல் இருங்கள்.

சத்யசாய் ஆன்மிக சிந்தனைகள்
Advertisement
Advertisement