எளியவர்களை ஆதரியுங்கள்
டிசம்பர் 19,2012,
10:12  IST
எழுத்தின் அளவு:

* ஒவ்வொருவரும் தங்களை விட, மற்றவரை உயர்வாக மதிப்பிடுங்கள்.
* பொல்லாதவர்களைக் குறித்து எரிச்சல் அடையாதே. நியாயக்கேடு செய்கிறவர் மீது பொறாமை கொள்ளாதே. ஏனெனில், அவர்கள் புல்லைப் போல வெகு சீக்கிரத்தில் அறுப்புண்டு, பசும்பூண்டைப் போல வாடிப்போய் விடுவார்கள்.
* அடங்காதவர்களை எச்சரியுங்கள். பலவீன மனம் படைத்தவர்களைத் தேற்றுங்கள். எளியவர்களை ஆதரியுங்கள். எல்லா மனிதர்களிடமும் பொறுமையாய் இருங்கள்.
* மகனே! என் (இயேசு) போதனையை மறக்காதே! என் கட்டளைகளை உன் இதயம் கடைபிடிக்கட்டும். அவைகள் தான் உனக்கு நெடுநாள் வாழ்வையும், தீர்க்க ஆயுளையும், சாந்தியையும் அள்ளியள்ளி வழங்கும்.
* மரங்களின் மூலவேர் அருகே கோடாரி வைக்கப்பட்டு உள்ளது. ஆகையால், நற்கனி கொடாத ஒவ்வொரு மரமும் அடியோடு வெட்டப்பட்டு அக்கினியிலே போடப்படும்.
- பைபிள் பொன்மொழிகள்

Advertisement
பைபிள் ஆன்மிக சிந்தனைகள்
Advertisement
வேதங்கள் தெரிந்துகொள்ள »
Advertisement