மனப்படகின் பாயை விரி!
ஜூன் 09,2009,
10:22  IST
எழுத்தின் அளவு:

* பல ஆண்டுகளாக பூட்டிக் கிடக்கும் அறை இருண்டு கிடக்கும். ஆனால், அந்த அறைக்குள் விளக்கினைக் கொண்டு வந்த உடனேயே இருள் மறைந்து ஒளி பரவும். அதுபோல, இறைவனின் கருணைப் பார்வை பட்டவுடனே யே பல பிறவிகளில் செய்த பாவங்களும் உடனேயே நீங்கிவிடும்.
* இறைவனின் அருள் என்னும் காற்று இடையறாது வீசிக் கொண்டு தான் இருக்கிறது. வாழ்க்கை என்னும் கடலில் முன்னேற விரும்பினால் உனது மனமாகிய படகின் பாயை விரித்தால் கடலைக் கடந்து கரை சேரலாம்.
* இறைவனின் திருப்புகழைப் பாடும் போது, கை களை அசைத்துக் கொண்டும், இசைத்துக் கொண்டும் பாடுவாயாக. அப்போது பாவம் என்னும் பறவைகள் பறந்தோடிப் போகும்.
* சேற்றில் புரள்வது தான் குழந்தையின் இயல்பு. ஆனால், தாய் குழந்தையை அப்படியே விடாமல் குளிக்கச் செய்து சோறூட்டுவாள். அதுபோல பாவம் செய்வது மனித இயல்பு என்று கடவுள் விட்டுவிடுவதில்லை. கடைத் தேற்றும் வழிமுறைகளை அருள் செய்கிறார்.
* நம்பிக்கை உள்ளவனுக்கு எல்லாமே உண்டு. நம்பிக்கை இல்லாதவனுக்கோ ஒன்றுமே இல்லை. நம்பிக்கை தான் வாழ்வு. வேண்டாத சந்தேகமோ, மனிதனை அழிவுப் பாதையில் கொண்டு சென்று விடும். 

Advertisement
ராமகிருஷ்ணர் ஆன்மிக சிந்தனைகள்
Advertisement
வேதங்கள் தெரிந்துகொள்ள »
Advertisement