காலத்தை எதிர்கொள்!
டிசம்பர் 25,2012,
09:12  IST
எழுத்தின் அளவு:

* ஆணும் பெண்ணும் ஒருவருக்கொருவர் உண்மையாக இருந்து விட்டால் நன்மை உண்டாகும்.
* பழிக்குப்பழி வாங்க வேண்டும் என்ற எண்ணத்துடன், தண்டனை வழங்கும் அதிகாரம் எந்த மனிதனுக்கும் கிடையாது.
* புறவுலகில் உள்ள வெளிப்பொருள்களில் எப்போது பற்று நீங்குகிறதோ அப்போது கடவுளை அறியும் ஞானம் உண்டாகும்.
* தவறு செய்தாவது பணத்தை மட்டும் தேட வேண்டும் என்று நினைப்பவர்கள் தங்களை மேதாவிகள் என்று எண்ணிக் கொள்கிறார்கள்.
* கால வெள்ளத்தில் வரும் மாறுதல்களுக்கெல்லாம் மாறாமல், அவற்றைத் தனதாக்கிக் கொண்டு வாழும் திறமை நமக்கு வேண்டும்.
* எதை நினைக்கிறாயோ அதுவேயாகிறாய் என்பது உண்மையே. ஆனால், உலகம் அறியத்தக்க வகையில் நாம் உண்மையானவர்களாக இருக்க வேண்டும்.
* நன்மை எது என்று அறிந்த பிறகும், தீமையைக் கைக்கொள்வது கண்ணைத் திறந்துகொண்டு கிணற்றில் குதிப்பது போலாகும்.
- பாரதியார்

Advertisement
பாரதியார் ஆன்மிக சிந்தனைகள்
Advertisement
வேதங்கள் தெரிந்துகொள்ள »
Advertisement