Advertisement
இறுமாப்பு கூடவே கூடாது
ஜூன் 12,2009,
18:35  IST

* நாம் அமைதியற்று அலையும் போது, குறுக்கு வழியில் எதையும் அடையத் துடிக்கிறோம். நியாயமான வழி நமக்குச் சிக்கலானதாகத் தெரிகிறது. அதுவே நம்மை தவறான பாதைக்கு அழைத்துச் செல்கிறது. அதனால் பாவங்கள் செய்ய நேரிடுகிறது.
* நம்மை உண்மையான நல்வழியில் செல்ல பெரியோர்களும், ஞானிகளும் கற்றுக்கொடுத்திருக்கின்றனர். ஆனால், அந்த நல் வழியை நாம் மறந்து விடுகிறோம் அல்லது அந்நெறி முறைகளுக்கு நாம் மதிப்பளிப்பதில்லை.
* இயற்கை உங்களை அழைக்கிறது. அதன் அமைதிக்கு நடுவே தியானம் செய்யக் கற்றுக் கொள்ளுங்கள். அது உங்கள் மனத்தூய்மைக்கு வழிகாட்டும். இயற்கை சுயநலத்திலிருந்து நம்மை விடுவித்து, மேலான பொதுநலத்திற்கு நம்மை அழைத்துச் செல்கிறது.
* நம்மால் எதுவும் முடியும் என்று இறுமாப்புடன் வாதிட்டுக் கொண்டிருக்கும் வரையில் கடவுளின் அருள் நமக்கு கிடைப்பதில்லை. "எல்லாம் நீயே, எனக்கு எதுவுமே இல்லை' என்று சரணாகதி அடையும் போது கடவுள் நம்மைக் காப்பாற்ற ஓடோடி வருகிறார்.

சத்யசாய் ஆன்மிக சிந்தனைகள்
Advertisement
Advertisement