நல்லவரே மேலானவர்
டிசம்பர் 30,2012,
12:12  IST
எழுத்தின் அளவு:

* வானமே இடிந்து தலையில் விழுந்தாலும் நாம் அச்சப்படத் தேவையில்லை.
* உயிர்கள் மீது அன்பு செலுத்தினால் ஏற்றத் தாழ்வு நீங்கி ஒற்றுமை உண்டாகும். துன்பம் மறைந்து இன்பம் பெருகும்.
* "என் தெய்வம் வேறு; உன் தெய்வம் வேறு' என்று உலகமக்கள் கூறி ஒருவருக்கொருவர் தமக்குள் பகையுணர்வு கொள்ளுதல் மிக இழிவான செயல்.
* அறியாமைக் கண்களைத் திறந்து பார்த்தால், அறிவியல் உலகில் வாழும் தகுதி நமக்கு வந்து விடும். இல்லாவிட்டால், உலகம் நம்மைப் புறக்கணித்துவிடும்.
* ஆண்களும் பெண்களும் வெவ்வேறான இயல்பும் திறமையும் கொண்டவர்கள். இதில் அன்பு காட்டி ஆதரவுடன் குழந்தையை வளர்ப்பவள் பெண்ணே.
* வாழ்க்கைச் சக்கரத்திற்கு ஆண்பெண் என்னும் இரு சக்கரங்கள் உள்ளன. இதில் எது இல்லை என்றாலும் வாழ்க்கை வண்டி நகர முடியாது.
* ஜாதி அடிப்படையில் உயர்வு தாழ்வு கொள்வது பாவம். நீதி, நேர்மை தவறாமல் பிறருக்கு உதவும் எண்ணம் கொண்ட நல்லவர்களே மேலானவர்கள்.
- பாரதியார்

Advertisement
பாரதியார் ஆன்மிக சிந்தனைகள்
Advertisement
வேதங்கள் தெரிந்துகொள்ள »
Advertisement