வெற்றி பெற பக்தி தேவை
ஜூன் 16,2009,
10:25  IST
எழுத்தின் அளவு:

* "ராமா' என்னும் இனிய நாமத்திற்காக எல்லாவற்றையும் விட்டுவிடுங்கள். எதை வேண்டு மானாலும் தியாகம் செய்ய ஆயத்தமாய் இருங்கள். வலிமை மிக்க ஆனந்த மயமான ராம நாமத்தில் உங்களைக் கரைத்துக் கொள்ளுங்கள்.
* இறந்த காலத்தை மறந்துவிடுங்கள். எதிர்காலத்தைப் பற்றி பயம் சிறிதும் வேண்டியதில்லை. நிகழ் காலத்தில் ராம சிந்தனையோடு வாழப் பழகுங்கள். அதுதான் பயனுள்ள வாழ்வாகும்.
* இருள் உறையும் இடத்தில் ஒளியையும், துன்பத்திற்கு மாற்றாக இன்பத்தையும், நரகம் உள்ள இடத்தில் சொர்க்கத்தையும், மாயை நிலவுமிடத்தில் கடவுள் அருளையும் கொண்டு சேர்க்கும் ஆற்றல் இறை நாமத்திற்கு உண்டு.
* பக்தியும் அன்பும் கொண்டு இதயப்பூர்வமாக கடவுளை ஜபிக்கும் போது எங்கும் எதிலும் வெற்றி உண்டாகும். அப்போது அகங்காரத்திலிருந்து உதயமாகும் அந்தகார இருள் (கும்மிருட்டு) மறையும். நித்யானந்தம் என்னும் ஒளி எங்கும் பரவி ஆனந்தம் உண்டாகும்.
* கடவுள் எங்கும் இருக்கிறார். அவர் நம்முள்ளும் இருக்கிறார். நம்மைச் சுற்றிலும் இருக்கிறார். அவரைத் தேடி நாம் எங்கும் செல்ல வேண்டியதில்லை.

Advertisement
சுவாமி ராமதாஸ் ஆன்மிக சிந்தனைகள்
Advertisement
வேதங்கள் தெரிந்துகொள்ள »
Advertisement