சேவை நாளே பயனுள்ள நாள்
ஜூன் 18,2009,
10:39  IST
எழுத்தின் அளவு:

* சாதனை என்னும் இளஞ்செடி மண்ணிலிருந்து வருகிறது. அருள் என்ற சூரிய ஒளி பழத்தைப் பழுக்க வைக் கிறது. சாதனையும், அருளும் இணையும் போது, ஞானம் உண்டாகிறது.
* பிறரிடம் தீயபண்புகள் தென்பட்டால், அதற்கு உன்னிடம் உள்ள தீமைதான் காரணம். ஒருவரைப் பிடிக்க வில்லை என்றால், அவர்களுடன் பழகாமல் ஒதுங்கி விடு. அதற்காக யாரையும் வெறுப்பதற்கு உனக்கு உரிமை இல்லை.
* உச்சிவேளையில் சூரியனின் கதிர்களால் நிழல் விழுவதில்லை. அதைப்போல உள்ளச்சூரியன் உச்சத்தில் இருக்கும்போது சந்தேக நிழல் விழுவதற்கு வாய்ப்பில்லை.
* எளிய ஏழை மக்களுக்கு முடிந்த அளவில் பொருள் உதவியோ அல்லது உடல் உழைப்போ செய்ய வேண்டும். சேவை செய்யும் ஒவ்வொரு நாளும் பயனுள்ள நாட்களாகும்.
* அன்பு, கருணை, தயை, ஒழுக்கம் போன்ற நற் குணங் களால் ஏற்படும் மனநிறைவே சொர்க்க மாகும். நாம் எங்கேயோ சொர்க்கம் இருப்பதாக எண்ணுகிறோம். நீங்களே உங்களுக்கான சொர்க்கத்தை உருவாக்கிக் கொள்ள வேண்டும்.

Advertisement
சத்யசாய் ஆன்மிக சிந்தனைகள்
Advertisement
வேதங்கள் தெரிந்துகொள்ள »
Advertisement