நன்மை அதிகரிக்க வழி
ஜனவரி 10,2013,
14:01  IST
எழுத்தின் அளவு:

* உணவளிப்பதும், அறிந்தவரோ அறியாதவரோ கண்டவுடன் ஸலாம் கூறுவதும் மிகச் சிறந்த செயலாகும்.
* ஸலாமைக் கொண்டு முந்துபவன் பெருமையை விட்டும் நீங்கிக் கொண்டவனாகின்றான்.
* உங்களில் இறைவனுக்கு மிகவும் நெருங்கியவர், முதல் முறையாக ஸலாம் கூறுபவராகும்.
* பாவமன்னிப்பைப் பெறுவதிலும், அல்லாஹ்வின் அருளைப் பெறுவதிலும் அல்லாஹ்வுக்கு மிகவும் நெருங்கி இருப்பவர் முதலாவதாக ஸலாம் சொல்பவரே.
* நீர் வீட்டில் நுழைந்தால் உமது மனைவிக்கு ஸலாம் சொல்வீராக!
* தர்மம் செய்வதில் பத்து நன்மை தான் கிடைக்கும். ஆனால், கடன் கொடுப்பதால் பதினெட்டு நன்மை கிடைக்கின்றது.
* மறுமையின் காரியங்களைத் தவிர மற்ற அனைத்திலும் நிதானம் சிறப்பைத் தரும்.
* அழகிய முறையில் எவர் கடனைத் திருப்பித் தருகிறாரோ அவர் தான் உங்களில் மேலானவர்.
- நபிகள் நாயகம்

Advertisement
குரான் ஆன்மிக சிந்தனைகள்
Advertisement
வேதங்கள் தெரிந்துகொள்ள »
Advertisement