Advertisement
பெற்றோர் நம் தெய்வம்
ஜனவரி 15,2013,
10:01  IST

* வாழ்க்கை என்னும் நாணயத்திற்கு இன்பம், துன்பம் என இருபக்கங்கள் இருக்கின்றன.
* உலகில் உள்ள அனைத்தும் மாறுதலுக்கு உட்பட்டது. மாற்றம் என்ற ஒன்று மட்டுமே என்றைக்கும் மாறாதது.
* மனித உடலை நமக்களித்த பெற்றோரை, கடவுளாக மதித்துப் போற்றுங்கள்.
* குழந்தைகள் பஜனை, தியானம் போன்றவற்றில் ஈடுபட வழிகாட்டுங்கள்.
* "நான்' என்ற ஆணவம் கொண்டவனை துன்பம் தொடரும்.
* சமூகப்பணியில் ஈடுபடுபவர்களிடம் தற்பெருமை கூடாது. மன அடக்கத்துடன் இறைவன் அளித்த வாய்ப்பாக எண்ணி தொண்டாற்றுங்கள்.
* மற்றவர்களின் வற்புறுத்தலுக்காக தொண்டில் ஈடுபடாதீர்கள். அன்புக்காக தொண்டாற்றுவதே சிறந்தது.
* வாழ்க்கை ஒரே திசையில் செல்லும் நீரோட்டம் என்பதால் பயனுள்ள வகையில் நேரத்தை செலவழிப்பதே அறிவுடைமை.
- சாய்பாபா

சத்யசாய் ஆன்மிக சிந்தனைகள்
Advertisement
வேதங்கள் தெரிந்துகொள்ள »
Advertisement