இறைவன் தரும் பரிசு
ஜனவரி 15,2013,
10:01  IST
எழுத்தின் அளவு:

* கெட்ட மனிதர்களில் இரட்டை முகம் படைத்தவர்களை நீங்கள் காணுவீர்கள். அவர்கள் சிலரிடம் ஒரு முகத்துடன் செல்வார்கள். வேறு சிலரிடம் மற்றொரு முகத்துடன் செல்வார்கள்.
* இளமை ஆட்டங்களில் மிக எச்சரிக்கையாக இருந்து கொள்ளுங்கள். இளமைப்பருவம் ஷைத்தான் வேட்டையாடும் தலமாகும்.
* அக்கிரமம் செய்கிறவன் நிச்சயமாக அவனையே அக்கிரமத்தில் மூழ்கடிக்கிறான். ஆனால், அவனால் இதனை உணர்ந்து கொள்ள முடிவதில்லை.
* எவனுடைய தீங்கான செயலுக்குப் பயந்து மக்கள் அவனுக்கு மரியாதை கொடுக்கிறார்களோ, அவர்களே மக்களில் மகாகெட்டவர்கள்.
* பெருமைக்காக ஆடை அணிகின்றவருக்கு வாழ்வில் வறுமை உண்டாகும்.
* உலகத்தில் உண்மை விசுவாசிக்கு இறைவன் தரும் பரிசு வறுமையே.
* மனம் போன போக்கில் நடந்து கொண்டு இறைவன் அருளை எதிர்பார்ப்பவன் முட்டாள்.
* மனத்தை அடக்கியாண்டு மறுமைக்குப் பயன்படும் பணிகளைச் செய்பவனே அறிவாளி.
- நபிகள் நாயகம்

Advertisement
குரான் ஆன்மிக சிந்தனைகள்
Advertisement
வேதங்கள் தெரிந்துகொள்ள »
Advertisement