12 வருஷம் உங்களால் முடியுமா?
ஜூன் 18,2009,
16:52  IST
எழுத்தின் அளவு:

* கடவுள் சர்வாதிகாரியோ, ஏகாதிபதி யோ, கொடுங்கோல னோ அல்ல. அவன் உன் பிரியமுள்ள தந்தையே! வாஞ் சையோடு பாசம் பொழியும் அன்னை யே! உன் இணைபிரியாத தோழனே ஆவார்.
* அகந்தையை ஒழித்து, வேண்டாத எண்ணங்கள், பேராசையை அடியோடு விடுத்து தூய்மையான உணர்வுடன் அகிம்சையைக் கையாளும் போது ஆண்டவனைத் தரிசிக்கலாம்.
* 12 ஆண்டுகள் மனம், மொழி, மெய் என்று மூன்றாலும் சத்தியத்தை கடைபிடிப்பவனுக்கு "வாக்சித்தி' என்னும் உயரிய நிலை உண்டாகும். சத்தியம் எங்கு இருக்கிறதோ அங்கு எல்லா நற்குணங்களும் பொலிந்து நிற்கும்.
* நன்மை தராத செயல்களையோ, வெட்கப்படக் கூடிய செயல்களையோ ஒருபோதும் செய்யா தீர் கள். சமூகம் புகழும் நல்ல செயல்களையே விருப் பத்துடன் செய்யுங்கள்.
* மனதை கீழ்நிலைப்படுத்தும் எந்த விஷயத்தையும் சிறிதும் அனுமதிக்காதீர்கள். ஆன்மிக உணர் வினைத் தரும் தெய்வீக நூல்களைப் படியுங்கள். நல்லவர் களோடு பேசுங்கள், பழகுங்கள்.

Advertisement
சிவானந்தர் ஆன்மிக சிந்தனைகள்
Advertisement
வேதங்கள் தெரிந்துகொள்ள »
Advertisement