தேவைகளைக் குறைப்போமே!
ஜனவரி 20,2013,
15:01  IST
எழுத்தின் அளவு:

* ஒருவரைப் புகழ்வதிலும் கட்டுப்பாடு வேண்டும். ஒரேயடியாக முகஸ்துதி செய்யத் தொடங்கினால் அகங்காரம் உண்டாகி விடும்.
* மனிதனைப் பாவத்தில் தள்ளுபவை காமம், கோபம் இரண்டும் தான். ஆசையில் இருந்தே இவை பிறக்கின்றன.
* நம்மிடம் எத்தனையோ குறைகள் இருக்கின்றன. அதை மறந்துவிட்டு மற்றவர்களிடம் குற்றம் காண்பதில் கவனம் செலுத்தக்கூடாது.
* சவாரி முடிந்தபின் குதிரையைத் தட்டிக் கொடுப்பதுபோல, வேலை முடிந்தபின் செய்தவரைப் பாராட்டப் பழகுங்கள்.
* கொடிய பாவியாக இருந்தாலும் அவர்களை வெறுப்பதோ, தண்டிப்பதோ பயன்தராது. அவர்களுடைய மனம் நல்வழியில் திரும்ப வேண்டும் என்று கடவுளிடம் வேண்டிக் கொள்வது ஒன்றே சிறந்தது.
* தேவைகளை அதிகரித்துக் கொண்டே போவதால் மட்டும் வாழ்க்கைத் தரம் உயர்வதில்லை. இதனால், வாழ்வில் ஏக்கமே உருவாகிறது.
- காஞ்சிப்பெரியவர்

Advertisement
காஞ்சி பெரியவர் ஆன்மிக சிந்தனைகள்
Advertisement
வேதங்கள் தெரிந்துகொள்ள »
Advertisement