Advertisement
வெற்றி மேல் வெற்றி
ஜனவரி 20,2013,
15:01  IST

* எண்ணெய், தன்னையே எரித்துக் கொண்டுவிளக்கிற்கு ஒளி தருகிறது. நீங்களும் உங்களை பிறர் சேவைக்கு அர்ப்பணியுங்கள்.
* மற்றவர்கள் உங்கள் மதிப்பை குறைத்துக் கொள்வதற்கு இடம் கொடுக்காதீர்கள்.
* கோபம் என்ற இருள் மனதைச் சூழ்ந்து விடாமல் காத்து கொள்ளுங்கள். செய்ய வேண்டிய கடமையிலிருந்து ஒருபோதும் விலகிச் செல்லாதீர்கள்.
* தர்மத்தைத் தவிர உலகில் உள்ள மற்றதெல்லாம் வெறும் பொய்.
* உடல்நிலையைக் கவனிக்காவிட்டால், வாழ்வே துன்பமாகிவிடும். அதனால், ஆரோக்கியத்தைப் பேணுங்கள். உடம்பை வலிமையாக்க வேண்டுமானால், உள்ளமும் வலிமையாக இருக்க வேண்டும்.
* தெய்வமே அடைக்கலம் என்று உங்களின் பணிகளை மேற்கொள்ளுங்கள். வாழ்வில் நன்மை காண்பீர்கள்.
* மனவலிமை இல்லாதவனின் உள்ளம், குழம்பிய கடலுக்கு ஒப்பாகும்.
* தெளிந்த அறிவும், இடைவிடாத முயற்சியும் இருந்தால் வெற்றி மேல் வெற்றி வந்து குவியும்.
- பாரதியார்

பாரதியார் ஆன்மிக சிந்தனைகள்
Advertisement
வேதங்கள் தெரிந்துகொள்ள »
Advertisement