உறக்கத்தை விட முக்கியமானது
ஜூன் 23,2009,
09:47  IST
எழுத்தின் அளவு:

* உங்களை ஆறுதலடையச் செய்வதில் எனக்கு விருப்பம் இல்லை. நீங்கள் நிம்மதியாக உறங்குவது முக்கியம் அல்ல. விடியலில் வெளிச்சத்தைப் பார்ப்பது தான் முக்கியம்.


* வழிபடுதல் என்பது ஒரு செயல் அல்ல. அது ஓர் இயல்பான பண்பு. நீங்கள் சுவாசிக்கும் காற்று, அருந்தும் தண்ணீர், நடக்கும் பூமி, காணும் தாவரம், ரசிக்கும் பறவை, உண்ணும் உணவு என்று உங்களைச் சுற்றியுள்ள அனைத்தையும் ஆத்மார்த்தமாக வழிபடும் உணர்வுடன் அணுகினால், உங்கள் வாழ்வு மிக அழகாக மாறும்.


* இந்த சமூகத்தின் ஆதிக்கம் உங்களிடம் மிக அதிகமாக இருக்கிறது. உங்கள் சுயஇயல்பைப் பயன்படுத்தி நீங்கள் நடை போடுவதில்லை. இந்தச் சமூகத்திலிருந்து ஒதுக்க பட்டுவிடக் கூடாது என்ற அச்சத்தில் அதன் ஆதிக்கத்தி லிருந்து விடுபடாமல் வாழ்க்கைக்கு எதிரான பல மூடத் தனமான செயல்களை மனிதர்கள் செய்து கொண்டு இருக்கின்றனர்.


* எந்த உணவு உடலுக்குத் தேவைப்படுகிறதோ, அதைத் தான் உண்ணவேண்டும். எதை உண்ண வேண்டும் என உடலைக் கவனித்து உண்ணக் கற்றுக் கொண்டால் தானாகவே நீங்கள் சரியான உணவை உட்கொள்வீர்கள்.


 

Advertisement
சத்குரு ஆன்மிக சிந்தனைகள்
Advertisement
வேதங்கள் தெரிந்துகொள்ள »
Advertisement