மனம் தங்கம் போலத்தான்
ஜூன் 25,2009,
09:16  IST
எழுத்தின் அளவு:

!


* கடவுள் நம் தாயைப் போன்றவர். தாய் குழந்தைகளைப் பெற்றெடுக்கிறாள். ஒரு சில சந்தர்ப்ப சூழ்நிலைகளால் கெட்டவர்களாக மாறிவிடுகின்றன. அதற்காகத் தாய் மனம் சலிப்பதில்லை. கெட்ட குழந்தைகளையும் நல்லவர் களாகத் திருத்தவே முயல்கிறாள்.


* குழந்தை தெருவில் விளையாடி விட்டு சட்டையை அழுக்காக்கிக் கொண்டு திரும்பினாலும், தாய் அன்பினால் மீண்டும் நல்ல சட்டையைப் போட்டு விட்டு அழகு பார்க்கிறாள். அதுபோல, வாழ்வில் பலவிதமான அனுபவங்களைக் கொடுத்து கடவுளும் தாய் போல நம்மை திருத்தி அழகு பார்க்கிறார்.


* மழைநீர் போல் கடவுள் மனிதனைத் தூய்மையாகப் படைத்தார். ஆனால் அந்நீர் சேரும் இடத்திற்கேற்ப தன்மையைப் பெறுகிறது. மனிதனும் வாழ்கின்ற சூழ் நிலைக்கேற்ப நல்லவிதமான அல்லது தீய குணநலன் களைப் பெறுகிறான்.


* மாசு படிந்திருந்தால் தங்கத்தை எறிந்து விடுவதில்லை. அழுக்கை நீக்கினால், தங்கம் தனக்கான மதிப்பைப் பெறுகிறது. மனமும் தங்கம் போலத் தான்!. அதை கடவுளிடம் சமர்ப்பித்தால் அவர் நம் மன அழுக் கினைப் போக்கி அருள் செய்வார்.


 

Advertisement
சத்யசாய் ஆன்மிக சிந்தனைகள்
Advertisement
வேதங்கள் தெரிந்துகொள்ள »
Advertisement