நல்லதையே தேர்ந்தெடுங்கள்
ஜனவரி 25,2013,
16:01  IST
எழுத்தின் அளவு:

* தேடிய செல்வத்தால் வாழ்வு வளம் பெறும். சேர்த்து வைத்த புண்ணியம் வாழ்விற்கு பாதுகாப்பு தரும்.
* உலகில் நன்மையும், தீமையும் கலந்தே இருக்கிறது. நீங்கள் நல்லதை மட்டுமே தேர்ந்தெடுங்கள்.
* தனிமனிதனின் ஒழுக்கம் சமுதாய ஒழுக்கத்திற்கு அடிப்படை. அதனால், ஒவ்வொரு மனிதனும் ஒழுக்கத்துடன் வாழ கடமைப்பட்டிருக்கிறான்.
* ஏட்டுப்படிப்பை பெறுவது கல்வியாகாது. ஆன்மிக வாழ்வில் ஈடுபட்டு ஞானத்தை அடைவதே உயர்ந்த கல்வி.
* அன்பு, நல்லொழுக்கம், உயிர்களிடம் கருணை ஆகிய குணங்களைக் கொண்ட மனிதன் சொர்க்கத்தில் வாழும் பேறு பெறுகிறான்.
* கல்லிலே கடவுளைக் காண முயற்சிக்க வேண்டுமே ஒழிய, கடவுளைக் கல்லாக்க முயற்சிக்கக் கூடாது.
* சரியான டிக்கெட்டும், ரயிலும் கிடைத்து விட்டால் ஊர் போய்ச் சேரலாம். தெளிந்த அறிவும், சாஸ்திர ஞானமும் இருந்து விட்டால் லட்சியத்தை அடையலாம்.
- சாய்பாபா

Advertisement
சத்யசாய் ஆன்மிக சிந்தனைகள்
Advertisement
வேதங்கள் தெரிந்துகொள்ள »
Advertisement