உயிர்களிடம் கருணை காட்டு!
ஜனவரி 27,2013,
15:01  IST
எழுத்தின் அளவு:

* நடந்ததையே எண்ணிக் குமைய வேண்டாம். இனி நடக்க வேண்டிய விஷயத்தில் கருத்தைச் செலுத்துங்கள்.
* கல்லில் மட்டுமே தெய்வம் இருக்கிறது என்று எண்ணாதே. எல்லா உயிர்களிடமும் தெய்வம் இருக்கிறது
* மக்கள் கூட்டாக சேர்ந்து வணங்கும்போது, மனிதமனம் ஒருமைப்படுகிறது. அதற்காகவே கோயில்களை முன்னோர் ஏற்படுத்தினர்.
* பிறரை அடிமையாக நடத்த விரும்புபவர்களிடம் தெய்வாம்சம் உண்டாகாது. அனைவரையும் நேசித்து வாழ்வதே தெய்வீகம்.
* உலகம் நியாயவழியில் நடக்கவில்லை என்பதற்காக, நாம் மட்டும் ஏன் நியாயத்தைப் பின்பற்ற வேண்டும் என்று விபரீதமாக சிந்திக்கக் கூடாது.
* கெட்டிக்காரன் புளுகு எட்டு நாள் என்பார்கள். எத்தனை காலம் மோசக்காரன் தன் செயல்களை மூடி வைத்து மறைக்க முடியும்? ஒருநாள் வெளிப்பட்டு விடும்.
* காகம், குருவி, புழு, எறும்பு ஆகிய சிற்றுயிர்களுக்கும் நாம் தீங்கு செய்வது கூடாது. எல்லா உயிர்களிடமும் கருணை காட்ட வேண்டும்.
- பாரதியார்

Advertisement
பாரதியார் ஆன்மிக சிந்தனைகள்
Advertisement
வேதங்கள் தெரிந்துகொள்ள »
Advertisement