கனி தரும் மரமாக இருப்போமே!
ஜனவரி 27,2013,
15:01  IST
எழுத்தின் அளவு:

* தீமை உன்னை வெற்றி கொள்ள விடாதே. ஆனால், தீமையை நன்மையால் வெற்றி கொள்.
* படுகுழி தோண்டுபவன் அதற்குள் விழுவான். புதரை உடைப்பவன் பாம்பால் கடிக்கப்படுவான்.
* தன் வீட்டையும், தன் வீட்டிலுள்ளோரையும் விசேஷமாகப் போஷிக்காத எவனும் விசுவாசத்தை உதறியவன் ஆகிறான்.
* புத்திசாலியான பெண் தன் வீட்டைக் கட்டுவாள். புத்தியில்லாதவளோ அதைத் தன் கையாலே பிடுங்கிஎறிவாள்.
* ஒரு வீடு தனக்குள்ளே விரோதமாகப் பிளவுபட்டால் அந்த வீடு நிலைத்து நிற்க முடியாது.
* நல்ல மரம் கெட்ட கனிகளைக் கொடுக்காது. கெட்ட மரம் நல்ல கனிகளைக் கொடுக்காது.
* நீ விருந்து செய்யும்போது ஏழைகளையும் கூப்பிடுவாயாக. அவர்கள் பதிலுக்குப் பதில் செய்ய முடியாதவர்களாதலால் நீ பாக்கியவானாயிருப்பாய்.
* ரத்த வெறியர்களும், வஞ்சனையாளர்களும் தங்கள் வாழ்நாளில் பாதியளவு கூட வாழ்வதில்லை.
- பைபிள் பொன்மொழிகள்

Advertisement
பைபிள் ஆன்மிக சிந்தனைகள்
Advertisement
வேதங்கள் தெரிந்துகொள்ள »
Advertisement