பயமே நோய்க்கு காரணம்
டிசம்பர் 04,2007,
19:46  IST
எழுத்தின் அளவு:

* இன்று மனிதன் கவலையின் கைதியாக இருக்கிறான். மன நிறைவின்மையே கவலைக்கு காரணம். கவலை வேகத்தை விளைவிக்கிறது. இதய நோய்களுக்கு காரணம் கவலை. பயமே நோய்க்கு பெருங்காரணம்.

* ஆரோக்கியத்தின் இன்னொரு பகைவன் கோபம். அது ரத்த ஓட்டத்தில் விஷத்தை செலுத்திவிடுகிறது. சாத்வீக உணவை உட்கொள்ளுங்கள். கொழுப்பு சேர்த்த, வறுத்த உணவு இதயநோய்க்கு காரணம். கனிகள், முளைதானியங்கள் ஆகியவை உடலுக்கு மிகவும் சிறந்தது.

* ஒவ்வொரு நாளும் உணவு உண்ணும்போது, உணவுப் பொருட்களை, ஜீரணமாவதற்கென கடவுள் அளித்துள்ள நெருப்பில் அர்ப்பணிக்கிறோம். இறைவனுக்கு நன்றி பாராட்டி வழிபடும் வகையில் சாப்பிட வேண்டும். உணவை சமைக்கும் நெருப்பை கடவுள் என கீதை சொல்கிறது. உண்பதன் நோக்கம், கடவுள் நமக்கு அளித்த கடமைகளைச் செய்வது அல்லது அவனை மகிழ்விப்பதாகும். இதன் விளைவு கடவுளை நோக்கி முன்னேறுவது.

* மனிதன் இன்பமாக வாழவே பிறந்திருக்கிறான். ஆனால், அவன் துன்பத்தில் தவழுகிறான். இது வருத்தமான விஷயம். ஆனந்தத்தின் ஆதாரம் அவனிடமே இருக்கிறது. உண்மையான கல்வி, மனிதனுக்கு இன்பத்தை எவ்வாறு பெற வேண்டும் என்பதுபற்றி கற்பிக்க வேண்டும். கல்வி உன்னை இருளிலிருந்து ஒளிக்கு அழைத்துச்செல்ல வேண்டும்.

* ஒருவன் உன்னை குற்றம் கூறியோ, அவதூறாக பேசியோ, துன்புறுத்தினாலும், அதனையே அவனுக்கு திருப்பாதே. சகிப்புத்தன்மையுடன் நடந்துகொள். ஒருவனை நாய் கடித்தால் அவன் அதை திரும்ப கடிப்பதில்லை.

Advertisement
சத்யசாய் ஆன்மிக சிந்தனைகள்
Advertisement
வேதங்கள் தெரிந்துகொள்ள »
Advertisement