கடமையில் கண்ணாயிருங்கள்!
பிப்ரவரி 03,2013,
12:02  IST
எழுத்தின் அளவு:

* காற்றை எந்த இடத்திலும் கட்டுப்படுத்தி வைக்க முடியாது. அதுபோல ஆன்மிக காற்றும் உலகெங்கும் வீசிக் கொண்டு இருக்கிறது. இதை யாராலும் தடுத்த நிறுத்த முடியாது.
* கடவுள் நமக்குரியவர் என்று நினைப்பதை விட நாம் கடவுளுக்குரியவர் என்று சிந்திப்பது உயர்வானது.
* பஜனையில் பாடிக் கொண்டிருப்பது மட்டுமே பக்தியாகாது. உள்ளத்திலும், நடத்தையிலும் உண்மையும், தூய்மையும் வெளிப்படுவதே பக்தியின் இலக்கணம்.
* வெற்றியோ, தோல்வியோ நமக்கு கிடைப்பது கிடைக்கட்டும் என பொறுப்பை கடவுளிடம் ஒப்படைத்து விட்டு கடமையில் முழுமையாக ஈடுபடுங்கள்.
* கோபம், பேராசை, காமம், பொறாமை போன்ற மலைப்பாம்புகளின் பிடியில் மனிதன் சிக்கித் தவிக்கிறான்.
* கடவுளைச் சரணடைந்து விட்டால், அவரருளை எளிதாகப் பெறலாம்.
- சாய்பாபா

Advertisement
சத்யசாய் ஆன்மிக சிந்தனைகள்
Advertisement
வேதங்கள் தெரிந்துகொள்ள »
Advertisement