உடை விஷயத்தில் கவனம்
ஜூலை 02,2009,
09:52  IST
எழுத்தின் அளவு:

* தியானம் செய்வதாக சொல்லிக் கொண்டு பலர் வெறுமனே கண்ணை மூடிக்கொண்டு அமர்ந்திருக்கின்றனர். மனதைப் பலவிதமான எண்ணங் களில் செலுத்துகின்றனர். இப்படிப் பட்ட தியானம் எவ்வித பலனையும் தராது என்பதை உணருங்கள்.
* தியானம் என்பது நாம் செய்யும் எல்லாப் பணிகளிலுமே தேவை. தியானம் செய்ய முடிய வில்லையே, வழிபாடு செய்ய முடிய வில்லையே என்று வருந்தாதீர்கள். செய்யும் ஒவ்வொரு செயலையும் கடவுளுக்கு செய்யும் வழிபாடாகக் கருதுங்கள்.
* நம்முடைய தேசத்தின் பெருமையே அதன் சிறப்பான நாகரிகத்திலும், கலாசாரத்திலும் தான் அடங்கி இருக்கிறது. உடை என்பது நம் அங்கலட்சணத்தை மட்டுமல்ல, நம் மதிப்பை காட்டும் அடையாளமாக வும் இருக்கிறது. நாகரிகம் என்ற பெயரில் கண்ட கண்ட உடைகளை உடுத்தக்கூடாது. எளிய ஆடைகளையே அணியுங்கள்.
* நான் ஒரு கருவியாக இருக்கிறேன். தெய்வம் என் மூலமாகப் பணியைச் செய்கிறது. உயிரையும், உள்ளத்தையும், உடலையும் இயக்குவது கடவுளே என்று நம்புங்கள்.

Advertisement
சத்யசாய் ஆன்மிக சிந்தனைகள்
Advertisement
வேதங்கள் தெரிந்துகொள்ள »
Advertisement