பேச்சில் சிக்கனம் தேவை
பிப்ரவரி 11,2013,
14:02  IST
எழுத்தின் அளவு:

* ஆசையால் உலக இன்பத்தை அடைய முயல்கிறோம். எண்ணம் நிறைவேறியதும், மனதில் ஆசை அற்றுப் போவதில்லை. மற்றொன்று முளைவிடத் தொடங்குகிறது.
* தீயில் விட்ட நெருப்பு கொழுந்து விட்டு எரிவது போல, ஆசையின் தாக்கம் அதிகரிக்க அதிகரிக்க பாவமும் கொழுந்து விட்டு எரியத் தொடங்கும்.
* உயிர்கள் அனைத்தும் கடவுளே என்ற ஞானம் வந்து விட்டால் ஆசை, கோபம், பாவம், கவலை, பிறவித்துன்பம் ஆகியவை நம்மை விட்டு நீங்கி விடும்.
* பணம் மட்டுமில்லாமல் பிறரிடம் நாம் பேசும் பேச்சிலும் சிக்கனத்தைக் கடைபிடிப்பது நல்லது.
* மக்களுக்குச் சேவை செய்ய விரும்புபவர்கள், "என் குடும்பத்தையும் நானே பார்த்துக் கொண்டு தான் பொதுத் தொண்டுக்குப் போவேன்' என்று உறுதி எடுத்துக் கொள்ள வேண்டும்.
* உபவாசம் என்றால் "பட்டினி' என்பது மட்டுமல்ல. "கூட வசிப்பது' என்ற பொருளும் உண்டு. அதாவது கடவுளுக்குப் பக்கத்தில் ஒட்டிக் கொண்டு வசிப்பதும் <உபவாசமே.
- காஞ்சிப்பெரியவர்

Advertisement
காஞ்சி பெரியவர் ஆன்மிக சிந்தனைகள்
Advertisement
வேதங்கள் தெரிந்துகொள்ள »
Advertisement