கஷ்டப்படுபவர்களுக்கு உதவுங்கள்
ஜூலை 08,2009,
09:22  IST
எழுத்தின் அளவு:


* மனிதர்கள் பெண்ணாசையும், பணத் தாசையும் கொண்டவர்களாக இருக் கின்றனர். இந்த எண்ணமே தீராத நோயாக அவர்களைப் பீடித்திருக் கிறது. இதிலிருந்து விடுபட நல்லவர் களோடு பழகுவது தான் சரியான தீர்வு.


* சிலருடைய உள்ளம் கல்சுவர் போல உறுதியாக இருக்கும். அதில் ஆணி அடித்தால் அது வளைந்து போகும். அதுபோல, எவ்வளவு முயன்றாலும் அவர்களுக்குள் ஆன்மிக விஷயம் எதுவும் உள்ளே போகாது.


* பணம் அளவுக்கு அதிகமாக வைத்திருப்பவர்கள்


தங்களுடைய செல்வத்தை சுயநலத்தால் தனக்காகவே வைத்துக் கொண்டிருக்கக் கூடாது. கஷ்டப்படுகிற ஜனங்களுக்கு உதவி புரிய வேண்டும்.


* மீன்கொத்திப்பறவை போன்று உலகத்தில் வாழ்ந் திருங்கள். அது நீருக்குள் மூழ்குகின்ற போது, சிறகுகளில் கொஞ்சம் நீர் ஒட்டிக் கொண்டிருக்கும். வெளியில் வந்து சிறகுகளைக் குலுக்கியதும் அந்த நீரும் அகன்றுவிடும். அதுபோல உலகியலில் ஈடு பட்டாலும் பற்றற்று இருக்கக் கற்றுக்கொள்ளுங்கள்.

Advertisement
ராமகிருஷ்ணர் ஆன்மிக சிந்தனைகள்
Advertisement
வேதங்கள் தெரிந்துகொள்ள »
Advertisement