கடமையை சரிவர செய்யுங்கள்
ஜூலை 11,2009,
09:01  IST
எழுத்தின் அளவு:

* அறிவில் தெளிவும், ஓயாமல் கடமைகளைச் செய்யும் குணமும் கொண்டிருந்தால் எந்தச் செயலும் நல்லதாகவே முடியும்.


* நம் அறிவில் தெய்வத்தன்மை காணப் படுகிறது. எனவே, நமது செயல்களிலும் தெய்வத்தன்மை விளங்குவதற்குரிய வழி வகையைச் செய்ய வேண்டும்.


* உலகம் நமது அறிவிற்கு அடங்காத ஒன்றல்ல. சித்தம் (மனம்) நமக்கு வசமாகும்போது, உலகமும் நமக்கு வசமாகிவிடும்.


* இடைவிடாமல் கடமைகளைச் செய்யுங்கள். பெருமைப்படும்படி வாழுங்கள். இயலாவிட்டால் விதிவசம் என்று மகிழ்ச்சியோடு ஏற்றுக் கொள்ளுங்கள்.


* மனதை உற்சாக நிலையில் வைத்துக் கொண்டால் உடம்பிலே தீவிரமுண்டாகும். உடம்பைத் தீவிரமாகச் செய்து கொண்டால், உற்சாகம் பிறக்கும். மனத்


தளர்ச்சிக்கு சிறிதும் இடம் கொடுக்கக்கூடாது.


* உலகத்தார் அகங்காரம் என்ற அசுரனுக்கு வசப்பட்டு நரக துன்பத்தை அனுபவித்துக் கொண்டிருக்கின்றனர். அகங்காரம் அகன்று விட்டால், மனித ஜாதி தெய்வ நிலையைப் பெறலாம்.

Advertisement
பாரதியார் ஆன்மிக சிந்தனைகள்
Advertisement
வேதங்கள் தெரிந்துகொள்ள »
Advertisement