வாழ்க்கை ஒரு கடல் பயணம்
ஜூலை 29,2009,
11:15  IST
எழுத்தின் அளவு:

* இச்சை என்பது மனிதனுடன் பிறக்கும் இயல்பு ஆகும். அதைப் பண்படுத்தி உயர்கதி அடையச் செய்வதைத்தான் பக்தி என்கிறோம்.
* செய்யும் செயலின் நோக்கத்தைப் பொறுத்தே அது புனிதம் அடைகிறது. வீட்டுக்கு ஒருவன் நெருப்பு வைத்தால் அது தீயசெயல். ஆனால், பக்த அனுமான் இலங்கையில் சீதைக்காக இட்ட தீ புனிதமானதாகிறது.
* அறநூல்களைப் படிப்பது, நல்லவர்களிடம் பழகுவது, ஆண்டவனிடத்தில் முழு நம்பிக்கை வைப்பது, ஆலய தரிசனம் செய்வது இவை எல்லாம் பக்தி மார்க்கத்தில் வெற்றிக்கு வழிவகுக்கும்.
* விஷம் போன்ற கொடிய நண்பர்களை விட்டு விலகுங்கள். அவர்கள் நம்மைத் தீண்டாவண்ணம் காத்துக் கொள்ள வேண்டியது அவசியம்.
* எந்த செயலையும் முழு ஈடுபாட்டோடு செய்ய வேண்டும். ஆனால், அந்த விஷயம் நம்மை ஆக்கிரமிக்க அனுமதித்தல் கூடாது. வாழ்க்கை என்பது கடல் பயணம் போன்றது. கடலின் மேல் கப்பல் பயணம் மட்டுமே செய்ய வேண்டும். கடல் நீர் கப்பலுக்குள் புக அனுமதித்தால் கப்பல் மூழ்கி விடும்.

Advertisement
சத்யசாய் ஆன்மிக சிந்தனைகள்
Advertisement
வேதங்கள் தெரிந்துகொள்ள »
Advertisement