மனதை விரிவுபடுத்து!
மார்ச் 11,2013,
10:03  IST
எழுத்தின் அளவு:

* கைம்மாறு கருதாமல் பிறருக்குக் கொடுத்து மகிழுங்கள். அதுவே உண்மையான இன்பம்.
* பார்க்கும் இடமெல்லாம் கடவுள் நிறைந்திருக்கிறார். எல்லாப் பொருள்களிலும் பரம்பொருளைக் காண்பதே பேரின்பம்.
* தியாகமனப்பான்மை ஒரு மனிதனை மரணமில்லாப் பேரின்ப நிலைக்கு அழைத்துச் செல்லும்.
* குறிக்கோளுக்குச் செலுத்தும் முக்கியத்துவத்தை அதை அடைய மேற்கொள்ளும் பாதைக்கும் செலுத்துவது அவசியம்.
* சிலநேரங்களில் இன்பத்தைவிடத் துன்பமே மனிதனுக்கு சிறந்த ஆசிரியராக அமைந்து விடுகிறது.
* உலகம் எவ்வளவு பெரிதோ அந்த அளவுக்கு உங்கள் மனதையும் விரிவுபடுத்துங்கள்.
* தன்னைச் சரிப்படுத்திக் கொள்பவன் உலகைச் சரிபடுத்தும் தகுதியைப் பெறுகிறான்.
* நல்ல மனிதனை உருவாக்குவதில் இன்பமும் துன்பமும் சரிசமமான இடத்தை வகிக்கின்றன.
* மனத்தூய்மை மிக்கவர்கள் இந்த பிறவியிலேயே கடவுளைக் காணும்பேறு பெறுகிறார்கள்.
- விவேகானந்தர்

Advertisement
விவேகானந்தர் ஆன்மிக சிந்தனைகள்
Advertisement
வேதங்கள் தெரிந்துகொள்ள »
Advertisement