நேர்மை வழியை கடைபிடியுங்கள்
டிசம்பர் 06,2007,
19:01  IST
எழுத்தின் அளவு:

ஆன்மிக வாழ்க்கையில் நேர்மையை வளர்த்துக்கொண்டிருப்பது அவசியம். ஆன்மிகப் பாதையில் நேர்மை மட்டுமே உங்களுக்கு பாதுகாப்பாய் அமைய முடியும். அந்த நேர்மை முழுமையானதாய் இருக்க வேண்டும். நீங்கள் நேர்மையற்றவராய் இருந்தால் எடுத்து வைக்கிற அடுத்த அடியிலேயே விழுந்து மண்டையை உடைத்துக்கொள்ளும்படி ஆகும். ஆகவே நீங்கள் எதைச் செய்வதற்கு முன்பும், எதைத் தொடங்குவதற்கு முன்பும், எந்த ஒன்றை முயற்சித்துப் பார்ப்பதற்கு முன்பும் அதிகபட்ச நேர்மையுடன் இருக்கிறீர்களா என்பதை நிச்சயித்துக் கொள்ளுங்கள். அதை மேலும் வளர்த்துக்கொள்கிற நோக்கமும் உங்களிடம் இருக்க வேண்டும்.

ஒருவர் அறிவு பாதையில் செல்லலாம். இன்னொருவர் புனிதப் பாதையில் போகலாம். மற்றொருவர் சரணாகதியை நாடலாம். பாதை எதுவாயினும் அது முழுமையானதாய் இருக்க வேண்டும். அதை நீங்கள் நேர்மையின் மூலம் அடையமுடியும்.

முழுமையான குறையற்ற நேர்மை என்பது அடுத்தவரை வஞ்சிக்க முயலாதிருப்பதாகும். 'ஓ! அது ஒன்றும் முக்கியமில்லை, அடுத்த முறை நன்றாக அமைந்துவிடும்' என்பது போன்ற சமாதான வார்த்தைகளை பயன்படுத்தக்கூடாது.

நேற்றுபோல் இன்று இல்லை என்பீர்கள். நேற்று உங்களை முழுமையாய் ஒரு பணியில் ஒப்படைத்துக் கொண்டிருப்பீர்கள். அதனால் அது உவகை அளிப்பதாய் இருந்திருக்கும். நேற்று அழகாய் இருந்ததெல்லாம் இன்று அழகாய் தெரியவில்லை என்றால் நேர்மையின்மைதான் காரணம்.

Advertisement
ஸ்ரீ அன்னை ஆன்மிக சிந்தனைகள்
Advertisement
வேதங்கள் தெரிந்துகொள்ள »
Advertisement