வெற்றி அருள்வாய் காளி!
ஆகஸ்ட் 08,2009,
14:53  IST
எழுத்தின் அளவு:

* காளிதேவியே! எடுத்த செயல் அனைத்திலும் வெற்றி அருள வேண்டும். எங்கு நோக்கினாலும் வெற்றி வந்து சேரட்டும். பேசுவது அனைத்தும் வெற்றி யாகட்டும்.

* தாயே! என் வெற்றியை யார் தடுத் தாலும், எந்த மனிதர் தீங்கு செய்தாலும் அதனை மாய்த்து அருள் செய்வாய். இவ்வுலகில் வெற்றி மட்டுமே என்னை வந்து சேருமாறு நல்லருள் செய்.

* அன்னையே! எண்ணுகின்ற எண்ணங்களில் எல்லாம் நீயே நிறைந்து வெற்றியை நல்கு. எங்கும், எதிலும் எனக்கு துணை செய்து ஜெயத்தை தா.

* அம்மா! உன் அருளினால் ஐம்பெரும் பூதங்களான மண்ணும், காற்றும், நீரும், தீயும், வானமும் வந்து என்னை வணங்கி நிற்கட்டும். எனக்கு அருள் செய்த உன் அருள்பாதங்கள் வெற்றி பெறட்டும்.

* சக்தியே! உன் பாதங்களே சரணம் என்று பக்தியினால் பாடிப்பணிவோரின் வாழ்வில் கவலைகள், பிணிகள் தீர்ந்து நலமுண்டாகட்டும். அவர்கள் நல்வாழ்வு பெற்று இன்புறட்டும்.- பாரதியார்

Advertisement
பாரதியார் ஆன்மிக சிந்தனைகள்
Advertisement
வேதங்கள் தெரிந்துகொள்ள »
Advertisement