இன்று கிருஷ்ண ஜெயந்தி
ஆகஸ்ட் 13,2009,
15:07  IST
எழுத்தின் அளவு:

* கிருஷ்ணன் பிறந்தபோதே கம்சன் இருந்தான். ராமன் இருந்தபோதேராவணன் இருந்தான். பிரகலாதன் பிறந்தபோதே இரண்யகசிபு இருந்தான். இதைப்போல இறைவனின் படைப்பில் நல்லதும் தீயதும் கலந்தே இருக்கின்றது.

* இறைதாகம் உள்ளவன் கிருஷ்ணர் உபதேசித்த பகவத்கீதை முழுவதையும் பருக வேண்டுமென்பதில்லை. இறைவனின் திருப்புகழைப் பாடும் ஒரே ஒரு ஸ்லோகத்தை மட்டும் படித்தால் போதும். அவனது அருளைப் பெறமுடியும்.

* அனைவரின் தேவைகளையும் பூர்த்தி செய்யும் வல்லமை ஹரியாகிய கிருஷ்ணரின் புகழ்பாடும் பாகவதத்திற்கு மட்டுமே உண்டு.

* நம் குடும்பம் பற்றி, குழந்தைகள் பற்றி பலகாலம் சிந்திக்கிறோம். இதில் ஆயிரத்தில் ஒருபங்கு நேரத்தையும், முயற்சியையும் கிருஷ்ணனை நினைப்பதிலும், அவனைச் சரணடைவதிலும் செலவிட்டால் நம் துன்பம் அனைத்தும் விலகும்.

* கிருஷ்ணருக்கு கோவிந்தன் என்று ஒரு திருநாமம் உண்டு. பசுக்களைக் காத்து மந்தைகளை மேய்ப்பவன் என்று இதன் பொருள். உலகமாகிய மேய்ச்சலில் மனமாகிய பசுவை நெறிப்படுத்துபவன் என்பதே இதன் உட்பொருள்.- சாய் பாபா

Advertisement
சத்யசாய் ஆன்மிக சிந்தனைகள்
Advertisement
வேதங்கள் தெரிந்துகொள்ள »
Advertisement