நம்பிக்கையை விதைப்போம்
ஆகஸ்ட் 20,2009,
11:22  IST
எழுத்தின் அளவு:

* வாழ்வு சிறியது. காலம் பறக்கிறது. உங்கள் சாதனைகளோ ஆமை வேகத்தில் இருக்கிறது. அதனால், வேகமாக முன்னேற முயற்சி செய்யுங்கள்.* குடிநீர் பாத்திரத்தில் வெளியில் சுத்தப்படுத்துவதைக் காட்டிலும் உள்புறத்தில் சுத்தப்படுத்த அதிக அக்கறை காட்டவேண்டும். அதுபோல அகத்தூய்மை இல்லாத வாழ்வு பயனற்றதாகும்.* இன்று விதையை விதைத்தால் நாளை பயிரை அறுவடை செய்யலாம். அதுபோல மனதில் நம்பிக்கையை விதைத்து, தெய்வீகக்கனிகளைப் பழுக்கச் செய்யுங்கள்.* பூவில் மணம் போல, விறகில் தீயைப் போல, எள்ளில் எண்ணெய் போல, மனிதனிடம் தெய்வத்தன்மை வெளியே புலப்படாமல் நமக்குள்ளே அடங்கி கிடக்கிறது.* உண்மையே எப்போதும் வெல்லும். இதில் சிறிதளவும் சந்தேகம் வேண்டாம். யாருடைய உள்ளத்தில் உண்மை இருக்கிறதோ அவரைத் தேடி கடவுளே ஓடி வருவார்.* இதயம் என்னும் பாத்திரத்தில் உள்ள ஆசை என்னும் நீரைக் கீழே கொட்டி விடுங்கள். பகவந்நாமாவால் இதயத்தை நிரப்புங்கள். உயிர் என்னும் திரியில் கடவுள் என்னும் ஞானச்சுடரை பிரகாசிக்கச் செய்யுங்கள்.- சாய் பாபா

Advertisement
சத்யசாய் ஆன்மிக சிந்தனைகள்
Advertisement
வேதங்கள் தெரிந்துகொள்ள »
Advertisement