E-paper| Mobile Apps

iPad

iPad E-paper

iPhone

Android

Android Tablet

Windows

Windows 8

Blackberry

bbicon OS 10

Mobile Election

| Get Font | Site Map |  RSS Feed
Advertisement
கை விடமாட்டாள் காளிமாதா
ஆகஸ்ட் 22,2009,
15:45  IST
எழுத்தின் அளவு:

* காளியை வணங்கினால் நல்லகாலம் வரும். ஜாதிச் சண்டைகள் எல்லாம் தொலைந்து போகும்.

* காளியை வழிபட்டால் வாட்டும் தரித்திரம் அடியோடு விலகும். கல்விச்செல்வம் முதலிய யாவும் பெருகும்.

* படித்தவன் சூது, வாது போன்ற கபடங்கள் புரியக்கூடாது. அவ்வாறு செய்தால் கடுமையாக அல்லல்படுவான்.

* காளி வழிபாட்டால் தொழில் பெருகி தொழிலாளிகள் சுகவாழ்வு பெறுவர். சாத்திர அறிவு பெருகும். செய் தொழில் சூட்சுமங்கள் வளரும். மந்திரம், தந்திரம், தந்திரம் எல்லாம் நல்ல செயல்களுக்காக பயன்படுத்தப்படும்.

* காளி வழிபாட்டால் எட்டு வகையான அஷ்டலட்சுமி கடாட்சம் பெருகும். சுறுசுறுப்பு, தைரியம் உண்டாகும். பயம் விலகி ஓடும். அகக்கண்கள் திறக்கும். எங்கும் நியாய தர்மம் தழைக்கும். அறியாமை என்னும் பைத்தியம் பட்டென்று தெளியும்.

* காளி வழிபாட்டால் வீரம் உண்டாகும். மேன்மை எல்லாம் கிடைக்கும். சிவசக்தியே! மலையாள பகவதியே! அந்தரியே! சுந்தரியே! சண்டியே! காளியே! உன்னருளால் எங்கும் தர்மம் தழைக்கட்டும்.

-பாரதியார்

பாரதியார் ஆன்மிக சிந்தனைகள்
Advertisement
வேதங்கள் தெரிந்துகொள்ள »
Advertisement