கீழ்த்தரமாக நடத்தினாலும் அமைதி காப்போம்
ஆகஸ்ட் 24,2009,
11:00  IST
எழுத்தின் அளவு:

* மற்றவர்களிடம் கொள்ளும் அன்பாக இருக்கட்டும். உங்கள் தோட்டத்தில் மலரும் பூக்களாகட்டும். வாழ்வில் நீங்கள் அடையும் வெற்றிகளாகட்டும். தகுந்த சூழ்நிலையை உருவாக்கத் தவறிவிட்டால் அவை நிகழ்வதில்லை. ஒரு மலரை உருவாக்குவதை விட, அதற்கான தகுந்த சூழ்நிலையை உருவாக்கத் தவறிவிட்டால் அவை நிகழ்வதில்லை. ஒரு மலரை உருவாக்குவதைவிட, அதற்கான தகுந்த சூழ்நிலையை உருவாக்குவதற்கே நாம் முனையவேண்டும். எனவே, தோட்டத்து பூக்களானாலும், உங்களுக்குள் மலரும் மாற்றமானாலும், அதற்குத் தேவையான சூழ்நிலையை உருவாக்குவதே உங்கள் நோக்கமாக வேண்டும்.

* உங்களை கீழ்த்தரமாக நடத்தும் ஒருவரை அதேபோல் நடத்த எந்த விழிப்புணர்வும் தேவை இல்லை. ஆனால், அந்தச் சூழ்நிலையிலும், அமைதி காப்பதற்கு ஏராளமான விழிப்பு உணர்வு இருத்தல் அவசியம்.* உயிர்ப்புடன் வாழ்தல் என்பது அற்பமான விஷயம் அல்ல. அசாதாரணமான ஒரு நிகழ்வு அது. உயிர்ப்புடன் இருத்தல் இந்தப் பூமியில் மட்டுமல்ல. பிரபஞ்சத்திலேயே அபூர்வமான ஒரு செயல்.* எல்லாவற்றையும் படைத்தவன் உ<ங்களுக்குள் இருக்கிறான். படைப்பின் மூலம் உங்களுக்குள் தான் உயிர்ப்புடன் துடித்துக் கொண்டு இருக்கிறது. அதைக் கவனிக்காமல் வேறு எதைப்பற்றி சிந்தித்துக் கொண்டு இருக்கிறீர்கள்?

-சத்குரு ஜக்கிவாசுதேவ்

Advertisement
சத்குரு ஆன்மிக சிந்தனைகள்
Advertisement
வேதங்கள் தெரிந்துகொள்ள »
Advertisement