நல்லவருக்கு கைகொடுங்கள்!
மே 09,2013,
15:05  IST
எழுத்தின் அளவு:

* பிறர் எவ்வளவு தீயவரானாலும் நீங்கள் அவருக்கு கேடு நினைக்காதீர்கள். அதனால், உங்களுக்கு நீங்களே கேடு செய்தவராவீர்கள்.
* எந்த வேலையையும் தன் விருப்பத்திற்குஏற்ப மாற்றுபவரே அறிவாளி. அவரால் எந்தப் பணியிலும் மகிழ்ச்சியோடு ஈடுபட முடியும்.
* ஒருநாள் மனிதன் இறப்பது உறுதி. அதற்குள் ஒரு பெரிய குறிக்கோளை ஏற்றுக் கொண்டு அதற்காக பாடுபட்டு அடைய முயற்சிப்பது நல்லது.
* மனதில் அன்பு நிறைந்தவரே வாழ்ந்து கொண்டு இருக்கிறார். சுயநலம் கொண்டவரோ வாழவே முயற்சிக்கவில்லை.
* முதலில் வேலையாளாக பணியாற்றக் கற்றுக் கொள்ளுங்கள். பின்னர் தானே எஜமானராகும் தகுதி வந்து சேரும்.
* ஒருவரிடத்திலும் பொறாமைப்படாதீர்கள். நன்மை செய்வோர் ஒவ்வொருவருக்கும் கைகொடுக்கத் தயாராய் இருங்கள்.
* துன்பமற்ற இன்பத்தையோ, இன்பமற்ற துன்பத்தையோ உலகில் ஒருவராலும் பெற முடியாது.
- விவேகானந்தர்

Advertisement
விவேகானந்தர் ஆன்மிக சிந்தனைகள்
Advertisement
வேதங்கள் தெரிந்துகொள்ள »
Advertisement