படித்தவர்களுடன் பழகுங்கள்
செப்டம்பர் 08,2009,
15:31  IST
எழுத்தின் அளவு:

* அகம்பாவத்தை வெற்றி கொள்வது கடினமான செயல். அதில் வெற்றி பெற வேண்டுமானால் பல ஆண்டு முயற்சி தேவை. இரவுபகலாகப் புத்தகங்களைப் படித்து ஒப்பித்துப் பலவருடம் போராடி ஒரு பல்கலைப்பட்டம் பெறுகிறீர்கள். ஆன்மிகப் பரீட்சை இதைவிடக் கடுமையானது. இந்தப் பரீட்சையில் வெற்றி பெறுவதால் பிறப்பு, இறப்பு தொடரிலிருந்து விடுதலை கிடைக்கும். நிலையான மகிழ்ச்சி கிடைக்கும்.* சிலர் மனதைப் பஞ்சுப்பொதி போல வைத்திருக்கிறார்கள். இவர்களுக்கு ஞானம் சிறு நெருப்புப்பொறியாக பற்றினாலே வெற்றி நிச்சயம். சிலர் காய்ந்த சுள்ளிபோல வைத்திருக்கின்றனர். அதற்கு சிறிது நாளாகும். ஆனால், வெற்றி உறுதிதான். சிலர் ஈரமான விறகுக்கட்டாக மனதை வைத்திருக்கிறார்கள். இவர்களுக்கு ஞானத்தீ பட்டாலும் ஈரத்தின் தன்மையால் அணைந்து விடுகிறது.* கற்றவர்களிடமும், ஆன்மிக அனுபவம் கொண்டவர்களிடமும் மீண்டும் மீண்டும் தொடர்பு கொள்ளுங்கள். அப்போது, நாளடைவில் உங்கள் மனமும் புலன்களும் நேர்த்தியாக மாறும். தூயபஞ்சினைப் போல லேசாகி விடும். ஆனால், உலகில் பெரும்பாலானவர்கள் தங்கள் மனங்களையும், புலன்களையும் ஈரவிறகைப் போலவே வைத்து இருக்கிறார்கள். அதனால், கொழுந்து விட்டு எரியும் ஞானத்தீ கூட அஞ்ஞானம் என்னும் ஈரத்தால் அணைக்கப்பட்டு விடுகிறது.-சாய்பாபா

Advertisement
சத்யசாய் ஆன்மிக சிந்தனைகள்
Advertisement
வேதங்கள் தெரிந்துகொள்ள »
Advertisement