பணிவுள்ளவனுக்கே பெருமை
செப்டம்பர் 08,2009,
15:34  IST
எழுத்தின் அளவு:

* விருப்பு வெறுப்பின்றி அனைவருக்கும் நன்மை செய்யும் இறைவனை போற்றி வழிபடுவோருக்கு இன்பமே அன்றி எந்நாளும் துன்பமில்லை. இறைவனின் பெருமை மிக்க திருவடிகளை வணங்குவதே கற்றதனால் பெற்ற பயனாகும்.

* மதம் கொண்ட யானையைப் போல விளங்கும் ஐம்புலன்களையும் மனவலிமை என்னும் அங்குசத்தால் அடக்கியாளும் திறமை பெற்றவன் உயர்நிலையாகிய வானுலகத்தை அடையும் தகுதி பெறுவான்.

* பிறருடைய வளர்ச்சி கண்டு பொறாமை கொள்வது, பேராசைப்படுவது, கோபம் கொள்வது, கடுஞ்சொல் பேசுவது ஆகிய தீயகுணங்களை விலக்கி வாழ்வதே நல்வாழ்க்கையாகும்.

* ஒருவன் மிகவும் பணிவுள்ளவாகவே இருந்து, இனிமையான சொற்ளைப் பேசி வருவான் என்றால் அவனுக்கு அதைவிட வேறு பெருமை இல்லை.

* மிக நெருக்கடியான தருணத்தில், தன்னால் ஆன உதவியை ஒருவனுக்குச் செய்ய முயற்சிப்பவனின் பெருமை இந்த வையகத்தையும் வாகனத்தையும் விட மேலானது.

* ஆமை போல் ஐந்து உறுப்புக்களையும் தன் ஓட்டினுள் அடக்கிப் பாதுகாத்துக் கொள்வது போல, ஐந்துபுலன்களையும் தன் மனவலிமையால் அடக்கி ஆள வல்லவனுக்கு அவ்வலிமையே பாதுகாப்பாக அமையும்.

-திருவள்ளுவர்

Advertisement
திருவள்ளுவர் ஆன்மிக சிந்தனைகள்
Advertisement
வேதங்கள் தெரிந்துகொள்ள »
Advertisement