சாந்தம் வெற்றியளிக்கும்!
மே 28,2013,
10:05  IST
எழுத்தின் அளவு:

* கருணையும் சத்தியமும் ஒன்றையொன்று சந்திக்கும். நேர்மையும் அமைதியும் ஒன்றையொன்று முத்தமிடும்.
* வீடும் செல்வங்களும் தந்தையரின் வாரிசு சொத்து. புத்தியுள்ள மனைவியோ ஆண்டவரிடமிருந்து கிடைப்பது.
* வெறும் பகட்டின் மூலம் சுலபமாய்ச் சேர்த்த செல்வம் விரைவில் குறைந்து போகும். ஆனால், உழைப்பின் மூலம் சிறுகச் சிறுகச் சேகரிப்பவனோ செல்வத்தைப் பெருக்குவான்.
*தூரதேசத்திலிருந்து வரும் நற்செய்திகள் தாகம் பிடித்த ஆன்மாவிற்குச் குளிர்ந்த தண்ணீர் போல.
* சிலரது நற்காரியங்கள் முன்னதாகவே பிரபலம் அடைகின்றன. அப்படி ஆகாதவைகளை என்றென்றைக்குமே மறைத்து வைத்து விட முடியாது.
* பிறர் உங்களுக்கு எதெதையெல்லாம் செய்ய வேண்டும் என்று ஆவல் கொள்கிறீர்களோ, அவற்றை எல்லாம் நீங்களும் அவர்களுக்குச் செய்யுங்கள்.
* உங்களிலே அறிவாளியும், கல்விமானும் யார்? தன் அறிவின் சாந்த குணத்தோடு தன் காரியச் சித்திகளைக் காண்பிக்கட்டும்.
- பைபிள் பொன்மொழிகள்

Advertisement
பைபிள் ஆன்மிக சிந்தனைகள்
Advertisement
வேதங்கள் தெரிந்துகொள்ள »
Advertisement