குழந்தைகளுக்கு தெய்வப் பெயரிடுங்கள்
செப்டம்பர் 17,2009,
16:35  IST
எழுத்தின் அளவு:

* நாம் விரும்பியதை கொடுத்தாலும், கொடுக்காவிட்டாலும் இறைவனே நம்மை வழி நடத்துபவன். அதனால், பக்தி மார்க்கத்தை விட்டு விலகுதல் கூடாது.அவன் நம் தகுதி அறிந்து நிச்சயம் அருள்செய்வான். * கலியுகத்தில் இறைவனின் திருநாமங்களை ஜெபிப்பது மட்டுமே இறைவனை அடையும் வழியாகும். நாமங்களை ஜெபிப்பதற்கு குளிப்பது, பூஜை செய்வது போன்ற எந்த வரையறை எதுவும் தேவை இல்லை.
* பூஜை செய்தாலும், மந்திரங்களை ஜெபித்தாலும் இறைவனை நினைப்பது தான் முக்கியம். இறைவன் நமக்கு துணை செய்கிறான் என்ற நம்பிக்கை மிகவும் தேவை. இதனால், நாம் செய்யும் செயல்கள் சுலபமாகின்றன. மனதில் ஊக்கமும், தன்னம்பிக்கையும் பிறக்கிறது.
* குழந்தைகளுக்கு இறைவனின் திருநாமங்களைப் பெயரிடுங்கள். பிள்ளைகளை அன்போடு கூப்பிடும்போது, நம்மையும் அறியாமல் நாமஜபம் செய்த புண்ணிய பலனைப் பெற்றவர்களாகி விடுவோம்.
-ஹரிதாஸ்கிரி சுவாமி

Advertisement
ஹரிதாஸ்கிரி சுவாமி ஆன்மிக சிந்தனைகள்
Advertisement
வேதங்கள் தெரிந்துகொள்ள »
Advertisement