கோயில் வழிபாடே சரியானது
செப்டம்பர் 29,2009,
13:54  IST
எழுத்தின் அளவு:

* நாம் அமைதியற்று அலையும் போது, குறுக்கு வழியில் எதையும் அடையத் துடிக்கிறோம். நியாயமான வழி நமக்குச் சிக்கலானதாகத் தெரிகிறது. அதுவே நம்மை தவறான பாதைக்கு அழைத்துச் செல்கிறது. அதனால் பாவங்கள் செய்ய நேரிடுகிறது.

* நம்மை உண்மையான நல்வழியில் செல்ல பெரியோர்களும், ஞானிகளும் கற்றுக் கொடுத்திருக்கிறார்கள். ஆனால், அந்த நல்வழியை நாம் மறந்து விடுகிறோம் அல்லது அந்நெறிமுறைகளுக்கு நாம் மதிப்பளிப்பதில்லை.

* இயற்கை உங்களை அழைக்கிறது. அதன் அமைதிக்கு நடுவே தியானம் செய்யக் கற்றுக் கொள்ளுங்கள். அது உங்கள் மனத்தூய்மைக்கு வழிகாட்டும். இயற்கை சுயநலத்திலிருந்து நம்மை விடுவித்து, மேலான பொதுநலத்திற்கு நம்மை அழைத்துச் செல்கிறது.

* நம்மால் எதுவும் முடியும் என்று இறுமாப்புடன் வாதிட்டுக் கொண்டிருக்கும் வரையில் கடவுளின் அருள் நமக்கு கிடைப்பதில்லை. "எல்லாம் நீயே, எனக்கு எதுவுமே இல்லை' என்று சரணாகதி அடையும் போது கடவுள் நம்மைக் காப்பாற்ற ஓடோடி வருகிறார்.

* கடவுள் எங்கும் இருக்கிறார் என்றாலும் எளிய முறையில் அவரை அடையவேண்டுமானால், கோயிலுக்குத் தான் செல்ல வேண்டும். அங்கு வழிபாடு செய்வதே சரியானதாகும்.

-சாய்பாபா

Advertisement
சத்யசாய் ஆன்மிக சிந்தனைகள்
Advertisement
வேதங்கள் தெரிந்துகொள்ள »
Advertisement