எளிதாக எடுத்துக்கொடுங்கள்
செப்டம்பர் 29,2009,
13:59  IST
எழுத்தின் அளவு:

* வாழ்க்கையின் சிரமம் மிகுந்த நேரங்களையும், நோய்களையும் ஒதுங்கி நின்று வேடிக்கை பார்க்கக் கற்றுக்கொள்ளுங்கள். கோடை வெம்மையின் கடுமை வந்தால் பின்னாலேயே மழையின் குளுமையும் வரக் காத்திருக்கிறது என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
* வாழ்க்கையில் வேதனைகளை தாங்கிக் கொள்ள முயற்சி செய்யுங்கள். உள்ளத்தில் வேதனைகளை சுமந்து கொண்டு திரிவது மிகவும் சிரமமானது. நம்முடைய உடல் உள்ளப்படைப்புக்கள் ஆண்டவனால் நிறைய தாங்கும் தி பெற்றவை என்பதை நாம் சிறிதும் உணர மறுக்கிறோம்.
* வாழ்க்கையை ரொம்பத் தீவிரமாக எடுத்துக் கொள்ளும் மனிதர்களை விட்டு விலகி நில்லுங்கள். உங்களைச் சுற்றியுள்ள சூழ்நிலைகள் நெருக்குவதாக நினைக்காதீர்கள். எல்லாவற்றையும் எளிமையுடன் லேசாக ஏற்கத் தயாராகுங்கள்.
* சோதனைகளை எல்லாம் ஆண்டவன் நம்முடன் விளையாடும் விளையாட்டாக எடுத்துக் கொள்ள வேண்டும். வாடி வதங்கிய முகத்துடன் இருக்காதீர்கள். சிரிக்கக் கற்றுக் கொள்ளுங்கள். வெற்றி மனப்பான்மையை வளர்த்துக் கொள்ளுங்கள். வாழ்க்கையில் மகிழ்ச்சி மலர்வதற்கு இதுதான் வழி.
-ஸ்ரீஅன்னை

Advertisement
ஸ்ரீ அன்னை ஆன்மிக சிந்தனைகள்
Advertisement
வேதங்கள் தெரிந்துகொள்ள »
Advertisement