அளவான விரதம் போதும்
செப்டம்பர் 29,2009,
14:00  IST
எழுத்தின் அளவு:

* சாத்வீகமான உணவை மிதமாகச் சாப்பிடுவது நல்லது. மிளகாய், அதிகஉப்பு, வெங்காயம் போன்ற உணவுவகைகள் ஜீரண கருவிகளை எரிச்சல்படுத்துகின்றன. மூளையை மந்தமாக்குகின்றன. கீழான உணர்வுகளை உண்டுபண்ணுகின்றன. தூக்கத்தை அதிகப்படுத்துகின்றன.
* தேவையான அளவை விட சற்று குறைவாக உண்பது எப்போதும் நல்லது. ரொட்டி, பழம், காய்கறிகள், பால் போன்ற சாத்வீக உணவுவகைகள் நம் எண்ணங்களை சீர்படுத்தும் ஆற்றல் கொண்டவை. இவ்வுணவால் உடல் வலிமை குறைந்து விடுமே என்று அஞ்ச வேண்டியதில்லை. அசைவத்தை விட வேண்டும். உள்ளத்தின் பக்குவநிலைக்கேற்ப உணவுவகைகளை மாற்ற வேண்டும்.
* உள்ளமும் உடலும் ஒன்றை ஒன்று சார்ந்தவைகளே. அதனால், உள்ளம் சாத்வீக எண்ணங்களை நாட வேண்டும் என்று எண்ணினால் உணவிலும் சாத்வீகத்தை கைகொள்வது மிகவும் அவசியம். விரதம், பட்டினி போன்றவைகளால் உணவின் மீது கொள்கின்ற பற்று மெல்ல மெல்ல குறைய ஆரம்பிக்கும். ஆனால், பட்டினி என்பது மட்டுமே ஆன்மிக சாதனம் ஆகாது. உடல் வலிமை குன்றும்படியாக விரதம் மேற்கொள்ளக்கூடாது. அளவான விரதம், மிதமான உணவோடு, அமைதியான சிந்தனை இருந்தாலே ஆன்மிகம் கைகூடி விடும்.
-ரமணர்

Advertisement
ரமணர் ஆன்மிக சிந்தனைகள்
Advertisement
வேதங்கள் தெரிந்துகொள்ள »
Advertisement