தியானத்தில் ஆழ்ந்துவிடுங்கள்
டிசம்பர் 06,2007,
19:12  IST
எழுத்தின் அளவு:

* உங்கள் கடமைகளையும் தர்மங்களையும் ஆண்டவனுக்கு ஆராதனையாக அர்ப்ப ணித்து தொண்டாற்ற வேண்டும். நீங்கள் வெளியிடும் ஒவ்வொரு மூச்சும் ஐயன் திருவடிகளுக்குச் சமர்ப்பிக்கும் சுகந்த மலராக எண்ணி அர்ப்பணிக்க வேண்டும். இறைவன் அளித்த ஆயுட்காலத்தைப் பயனுள்ளதாக்க வேண்டும். எத்துயர்வரினும் தெய்வத்தின் மீது நம்பிக்கை இழக்கலாகாது.

* தியானத்தினால் நீங்கள் மனித குல ஒற்றுமையையும் தெய்வத்தின் எல்லையற்ற சக்தி எங்கும்பரவியிருப்பதையும் உணர்வதுடன் அதிலேயே ஆழ்ந்துவிடலாம். உங்களது அன்றாட வாழ்க்கை அனுபவத்தில் ஒரு பெரிய கவலை தோன்றியதும் அதுவரை உங்களைப் பற்றியிருந்த சிறிய கவலைகளை அது ஒடுக்கிவிடுவதை உணர்ந்திருப்பீர்கள். உங்கள் மனதில் தெய்வத்தைப் பற்றிய சிந்தனையே நிறைந்திருந்தால் தெய்வத்திற்காகவே நீங்கள் முழுமனதுடன் எப்போதும் இடைவிடாது ஏங்கிக் கொண்டிருந்தால் மற்ற அற்ப ஆசைகளும் சாதனைகளும் தோல்விகளும் கூட உங்களை பாதிக்கமாட்டா. அவையாவும் உங்கள் கவனத்திலிருந்து நீங்கிவிடும். தெய்வசிந்தனை என்ற வெள்ளத்தில் மூழ்கி விரைவிலேயே தெய்வத்தை உணர்தல் எனும் பேரானந்தப் பெருங்கடலில் மூழ்கும் நிலையை அடைவீர்கள்.

* என் மர்மத்தை எவரும் புரிந்து கொள்ளமுடியாது. நீங்கள் செய்யக் கூடிய தலைசிறந்த காரியம் இதில் மூழ்கிப் போவதுதான். வாதம் செய்து பயனில்லை. மூழ்கி ஆழத்தை அறி. உண்டு சுவையை அறி. அப்போதே நீ என்னைப் பற்றி உன் இதயம் திருப்தி கொள்ளும் வரை அலசிப் பேசலாம்.

Advertisement
சத்யசாய் ஆன்மிக சிந்தனைகள்
Advertisement
வேதங்கள் தெரிந்துகொள்ள »
Advertisement