அமைதியாகப் பணியாற்று!
ஜூலை 09,2013,
12:07  IST
எழுத்தின் அளவு:

* தொண்டாற்ற விரும்புபவர்கள் சொந்த விருப்பு வெறுப்புகளை மூட்டை கட்டி கடலில் தூக்கி எறிந்து விட்டு, கடவுளிடம் சரணாகதி அடைந்து விடவேண்டும்.
* தற்பெருமை சிறிதும் வேண்டாம். பொறாமைப்படுவதும் கூடாது. பூமித்தாயைப் போல பொறுமையுடன் பணியாற்றுங்கள். உலகமே உங்கள் காலடியில் கிடக்கும்.
* எந்த வேலையையும் ஒழுங்கு, அமைதியுடன் செய்ய பழகுங்கள். குறிக்கோளை நிர்ணயித்துக் கொண்டு அதைநோக்கிய பயணமாக வாழ்வை அமைத்துக் கொள்ளுங்கள்.
* செல்வம், புகழ், சுகபோக வாழ்வு இவையெல்லாம் சில காலம் மட்டுமே. உலக ஆசையில் மூழ்கி விடாதீர்கள்.
* முயற்சியுடன் உழைத்தால் நம்மிடம் பெருஞ்சக்தி உண்டாவதை உணரமுடியும். பிறருக்காகச் செய்யும் சிறு முயற்சி கூட, சிங்கத்தின் பலத்தை தந்து விடும்.
* மனத்தளர்ச்சி சிறிதும் கூடாது. எப்போதும் இனிமையோடும், மனஉறுதியோடும் இருக்கப் பழகுங்கள். இது பிரார்த்தனையை விட முக்கியமானது.
- விவேகானந்தர்

Advertisement
விவேகானந்தர் ஆன்மிக சிந்தனைகள்
Advertisement
வேதங்கள் தெரிந்துகொள்ள »
Advertisement