தெய்வத்துடன் பேசுங்கள்
செப்டம்பர் 29,2009,
14:05  IST
எழுத்தின் அளவு:

* உங்களுக்குப் பிடித்தமான கடவுள் படத்தின் முன் அமர்ந்து, கொஞ்சநேரம் அதை பார்த்துக்கொண்டே இருங்கள். பிறகு கண்களை மூடிக்கொண்டு அந்த உருவத்தையே சிந்தியுங்கள். உள்ளத்தில் இருந்து அந்த இறைவுருவம் மறையத்தொடங்கினால், மீண்டும் அத்திருவுருத்தை கண்ணால் பார்த்துவிட்டு தியானத்தைத் தொடருங்கள்.
* தெய்வத்துடன் பேசுவதாகக் கற்பனை கொள்ளுங்கள். "அம்மா! என்னைக் கைவிட்டு விடாதே! உன்னை விட்டால் எனக்கு வேறு துணையில்லை' என்று நாள்தோறும் மானசீகமாகக் கூறி ஜகன்மாதாவை அனுதினமும் சரணடையுங்கள்.
* தியானம் நம் எல்லாத்தரப்பினருக்கும் நல்லது. குழந்தைப் பருவத்திலேயே தியானத்தை பழக்கத்திற்கு கொண்டு வந்தால், உடல் ஆரோக்கியம், புத்திக்கூர்மை உண்டாகும். ஞாபகத்திறன் அதிகரிக்கும். மனதைப் பிடித்திருக்கும் சஞ்சலங்கள் அகலும்.
* முற்காலத்தில் காடுகளில் புதர் மண்டிக் கிடந்தது. இப்போது நம் மனம் தான் அக்காட்டினைப் போல மண்டிக் கிடக்கிறது. மனதைச் சுத்தமாக்கி, இறைவன் தங்கும் கோயிலாக்க வேண்டும். மனதில் உள்ள ஆசாபாங்களை அடியோடு விலக்கினால் மட்டுமே நிம்மதியுடன் வாழமுடியும். இதற்கு தியானம் மிக உதவியாகத் திகழ்கிறது.
-மாதா அமிர்தானந்தமயி

Advertisement
மாதா அமிர்தனந்தமயி ஆன்மிக சிந்தனைகள்
Advertisement
வேதங்கள் தெரிந்துகொள்ள »
Advertisement