வீட்டை சுத்தமாக்குங்கள்!
ஜூலை 09,2013,
13:07  IST
எழுத்தின் அளவு:

* பரிசுத்த நினைவின் காரணமாக எத்தனையோ சிறிய நன்மைகள் பெரிய நன்மைகளாக ஆகிவிடுகின்றன.
* பரிசுத்த எண்ணமில்லாத காரணத்தினால் எத்தனையோ பெரிய நன்மைகள் அற்பக் காரியங்களாகி விடுகின்றன.
* அல்லாஹ் பரிசுத்தமானவன். பரிசுத்தத்தையே விரும்புகிறான். எனவே, உங்கள் இல்லங்களை பரிசுத்தமாக வைத்துக் கொள்ளுங்கள்.
* எவர் பள்ளிவாசலை கட்டுகிறாரோ அவருக்காக அப்பள்ளிவாசலைப் போன்ற வீடு சொர்க்கத்தில் கட்டப்படுகின்றது.
* இறைவனை நீ பார்ப்பது போல் பயந்தவனாகத் தொழு! அவனை நீ பார்க்காவிட்டாலும் உன்னை அவன் பார்த்துக் கொண்டே இருக்கின்றான்.
* ஏழைகளின் துஆ(பிரார்த்தனை) இல்லை என்றால் செல்வந்தர்கள் அழிந்தே போவார்கள்.
* ஒருவருக்கு பொருள்வசதி இருந்தும் ஜகாத் (ஏழைவரி) கொடுக்கவில்லையானால் அவருக்கு ஒவ்வொரு நாளும் ஆயிரம் வானவர்கள் நரகத்தைப் பற்றி எச்சரிக்கை செய்து கொண்டே இருக்கிறார்கள்.
- நபிகள் நாயகம்

Advertisement
குரான் ஆன்மிக சிந்தனைகள்
Advertisement
வேதங்கள் தெரிந்துகொள்ள »
Advertisement