வெற்றிக்கான அடிப்படைகள்
செப்டம்பர் 29,2009,
14:11  IST
எழுத்தின் அளவு:

* பிறப்பது முதுமையை அடைவதற்காகஅல்ல. நிலையான மகிழ்ச்சியை உணர்வதே பிறவியின் நோக்கம். இதையே மோட்சம் என்று குறிப்பிடுகிறார்கள். மனிதப்பிறவி முழுவளர்ச்சியை அடைந்ததன் அறிகுறியே இதுவாகும்.
* கடவுள் தன்மையை அறிவதற்கு எதிரியாக இருக்கும் மறைமுக இடைஞ்சல்களை அப்புறப்படுத்த வேண்டும். அப்போது தான் உண்மைத் தன்மையை தெளிவாக நாம் அறியமுடியும். கடவுளைப் பற்றி ஆரம்பத்தில் சந்தேகம், தடுமாற்றம் போன்ற குறுக்கீடுகள் இருந்தாலும், நாளடைவில் ஞானத்தால் அவை முற்றிலும் மறைந்து விடும்.
* இறைவன் எல்லாம் அறிந்தவன். நமக்குத் தெரிந்தது கொஞ்சம் தான். எவ்வளவு தான் தெரிந்த ஒருவனின் அறிவும் குறிப்பிட்ட எல்லைக்குள் வரையறுக்கப்பட்டதே. மனித அறிவு சிற்றறிவே. எல்லாம் அறிந்த இறைவனின் அறிவு எல்லையற்றது.
* வெற்றிக்கு அடிப்படைகள் மூன்று. உழைப்பு, காலம், தெய்வம். உழைப்பு நம் கையில் இருக்கிறது. காலத்திற்காக(சரியான தருணத்திற்காக) நாம் காத்திருக்க வேண்டியிருக்கும். தெய்வ அருளை வழிபாட்டின் மூலம் பெறலாம். தெய்வஅருள் இருந்தால் மட்டும் தான் ஒரு செயல் வெற்றி பெறும்.
-தயானந்த சரஸ்வதி

Advertisement
தயானந்த சரஸ்வதி ஆன்மிக சிந்தனைகள்
Advertisement
வேதங்கள் தெரிந்துகொள்ள »
Advertisement