நம்பிக்கையே நமக்கு ஆதாரம்
செப்டம்பர் 29,2009,
14:19  IST
எழுத்தின் அளவு:

* நாம் எந்த அளவிற்கு இறைவன் மீது நம்பிக்கை வைக்கிறோமோ அந்த அளவிற்கு இறைவனது அருள் நமக்காகச் செயல்பட்டு உதவும். நாம் இறைவனை நாடினால் அது இறைவனுக்காகவே இருக்க வேண்டுமே ஒழிய வேறு எதற்காகவும் இருக்கக்கூடாது.
* மனிதனது அனைத்து முயற்சிகளுக்கும் ஆதாரமாக இருப்பது நம்பிக்கை. ஒரு மனிதனுடைய நம்பிக்கை எப்படியோ, அப்படியே அவன் வாழ்க்கைநிலை அமையும் என்று கீதையில் கிருஷ்ணன் கூறியிருக்கிறார்.
* குறிக்கோள் இல்லாத வாழ்வு என்பது பரிதாபகரமான வாழ்வாகும். ஒவ்வொருவருக்கும் ஒரு குறிக்கோள் இருக்கவேண்டும். அந்த குறிக்கோள் உயர்ந்ததாகவும், விசாலமானதாகவும், பெருந்தன்மை உடையதாகவும், சுயநலமில்லாததாகவும் இருக்க வேண்டும்.
* தூய ஆன்மிக வாழ்வு வாழ்வதற்கு கடவுளைத் தவிர மற்ற எல்லா விஷயங்களிலும் ஈடுபாடு அற்றுப் போகத் தேவையில்லை. அறிவியல், கலைகள், விளையாட்டு,வாழ்க்கை என்று ஆன்மிகம் தவிர்த்த மற்றவற்றின் வேர்களை வெட்டிவிடாதீர்கள்.
* இறைவன் ஆனந்தமயமானவன். ஆனால், இறைவனிடம் ஆனந்தம் மட்டுமில்லை. எல்லாமே இறைவன் தான். சாந்தம், வீரம், மேன்மை, மோட்சம், ஞானம், ஆற்றல், வசீகரம் என்று அனைத்தின் வடிவமாகவும் இறைவனே இருக்கின்றான்.
-அரவிந்தர்

Advertisement
ஸ்ரீ அரவிந்தர் ஆன்மிக சிந்தனைகள்
Advertisement
வேதங்கள் தெரிந்துகொள்ள »
Advertisement