ருசிக்காக சாப்பிடக்கூடாது
அக்டோபர் 19,2009,
16:26  IST
எழுத்தின் அளவு:

* இன்று நண்பனாய் இருப்பவன் எதிர்காலத்தில் எதிரியாக மாறலாம். ஆனால், என்றுமே நம்மை கைவிடாத நண்பன் ஒருவன் தான். அவனே இறைவன். அவனை நம்பினால் என்றும் நமக்கு அடைக்கலம் தருவான். * கடவுளைக் காண இயலவில்லை என்பதால் அவர் இல்லை என்று ஆகிவிடாது. பலரும் நம் முன்னோர்களை, தாத்தாவைப் பார்த்ததில்லை. அதனால் தங்கள் தந்தைக்கு தந்தையில்லை என்று ஆகிவிடுமா?
* யாரிடமாவது நம் துக்கங்களை கூறினால் தான் மனம் ஆறுதல் அடையும். சுமை குறைந்தாலன்றி மனம் அமைதி பெறுவதில்லை. நம் மனச்சுமைகளை போக்கி அருள் செய்யும் வழித்துணையாக இறைவன் இருக்கிறான்.
* தொடக்க காலத்தில் இறைவன் மீது பயபக்தி இருக்க வேண்டும். பிறகு பயம் தேவையில்லை. அன்பு கொண்டு ஆழமாக பக்தி செய்யும் பக்தனிடத்தில் பயம் சிறிதும் தேவையில்லை.
* நாவின் ருசிக்காக உண்பது கூடாது. உயிர் வாழ்வதற்காக மட்டுமே உண்ணவேண்டும். அதுபோல அளவுக்கு மீறி உறங்குவதும் கூடாது. ஓய்வு நோக்கில் உறங்கி சீக்கிரம் துயில் எழ வேண்டும்.
* அதர்மம் செய்பவரிடம் வெறுப்பு காட்டத்தான் வேண்டும். ஆனால், நாம் அவரது செயலை மட்டுமே வெறுக்கவேண்டுமே ஒழிய அவரைப் புறக்கணிப்பது கூடாது.
-மாதா அமிர்தானந்தமயி

Advertisement
மாதா அமிர்தனந்தமயி ஆன்மிக சிந்தனைகள்
Advertisement
வேதங்கள் தெரிந்துகொள்ள »
Advertisement