மனித நெஞ்சங்களில் மறைந்த ஒளி
அக்டோபர் 19,2009,
16:32  IST
எழுத்தின் அளவு:

* கீழ்வானில் சூரியனின் ஜோதி உதித்தது. மலைகளின் மீது அவன் அருள்விழி பட்டது. கடலலைகள் அவனால் ஒளி பெற்றது. மலை,காடு என்று இப்பூமியெங்கும் ஒளி பரவியது. ஆனால், மனிதமனங்களில் மட்டுமே இருள் நிலவுகிறது. * சூரியஜோதி என்னும் கரையற்ற வெள்ளம் திசை எட்டும் பாய்கிறது. மாசில்லாத அந்த ஒளி எல்லையற்ற அருளை எங்கும் பரப்பி நிற்கிறது. ஆனால், மனிதனின் நெஞ்சம் மட்டும் இருளில் குமைந்து கொண்டு கொடுமையைக் கொண்டாடுகிறது.
* தேன் சொட்டும் மலர்களின் ஊடே சூரியஜோதி அமுதம் போல பாய்கிறது. வானில் பாடும் பறவைப் புள்ளினங்கள் கதிரவனின் ஜோதியைக் கண்டு வாழ்த்திப் பாடுகின்றன. இந்த ஜோதியின் நல்லியல்புகளை நிலம், நீர், காற்று என்று எல்லாம் கொண்டி மகிழ்கின்றன. ஆனால், கீழ்மக்களின் நெஞ்சம் மட்டும் சிறுமையை நோக்கி செல்கிறது.
* நீர்ச்சுனைகள், நெடிய மலைகள் சூரிய ஒளியில் புன்னகை செய்து மகிழ்கின்றன. கரிய வானில் கருமேகங்கள் சூரியச்சுடரின் வரவு கண்டு கலைந்து வெண்மையாகின்றன. ஆனால், சாத்திரங்கள் பல கற்றும், தேர்ச்சி பெற்றும் மனித நெஞ்சங்கள் மட்டும் ஒளி பெறவில்லை.
-பாரதியார்

Advertisement
பாரதியார் ஆன்மிக சிந்தனைகள்
Advertisement
வேதங்கள் தெரிந்துகொள்ள »
Advertisement