பிறர் நலம் பேணுங்கள்
அக்டோபர் 19,2009,
16:35  IST
எழுத்தின் அளவு:

* மனிதர்களை நேசித்து தொண்டு செய்து வாழுங்கள். ஆனால் அதை யாரும் பாராட்ட வேண்டும் என்று ஆசைப்படாமல் இருப்பதில் கவனமாக இருங்கள்.* வெறுமனே பயனற்ற வாழ்க்கை வாழ்வதில் அர்த்தமில்லை. நல்ல லட்சியங்களுக்காக வாழ வேண்டும். நம்மால் இயன்ற நல்லபணிகளைச் செய்ய வேண்டும். மனிதவுடலை அதற்காகத் தான் இறைவன் நமக்கு கொடுத்திருக்கிறார்.
* மனதைத் தூய்மையாக்கும் பணியை, பொறுப்பை கடவுளிடம் ஒப்படைத்துவிடுங்கள். நமக்குள் இருக்கும் தீயவற்றை அவரே அகற்றிவிடுவார்.
* விவேகமுள்ள சிறந்த நண்பன் இறைவன் மட்டும் தான். ஏனெனில் இறைவனுக்குத் தான் நம்மை எப்போது அடிக்க வேண்டும். எப்போது அணைக்க வேண்டும் என்பது நன்கு தெரியும்.
* ஆண்டவனின் அருளாட்சியில் தீமையென்பது சிறிதும் இல்லை. கடவுளுக்கு எதுவும் அற்பமாகத் தோன்றாது. அதுபோல இது தீமை என்றோ, இது அற்பம் என்றோ எதையும் எண்ணுதல் கூடாது.
* பிறர் நலம் பேணுதல், கடமையாற்றுதல், இல்லறம், நாட்டுப்பற்று, உலக உயிர்களிடம் அன்பு ஆகிய நல்ல குணங்களின் கருவியாக நம் உயிர் விளங்க வேண்டும். யாரிடத்தும் வெறுப்பு கூடாது. உள்ளத்தில் வெறுப்புணர்வு கொண்டவர்கள் இறைவனையே வெறுப்பவர்கள் ஆவார்கள்.
-அரவிந்தர்

Advertisement
ஸ்ரீ அரவிந்தர் ஆன்மிக சிந்தனைகள்
Advertisement
வேதங்கள் தெரிந்துகொள்ள »
Advertisement